சந்தவாசலில் உரம் விற்பனை கடைகளில் அதிகாரி ஆய்வு

கண்ணமங்கலம், நவ.13: கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசலில் உரம் விற்பனை கடைகளில் வேளாண்மை இணை இயக்குனர் முருகன் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் முருகன், கண்ணமங்கல் அடுத்த சந்தவாசல் பகுதிகளில் உள்ள உரம் விற்பனை கடைகளில் நேற்று முன்தினம் திடீர் ஆய்வு செய்தார். அப்போது, கடை உரிமம், பாய்ண்ட் ஆப் சேல் மெஷின், உரம் இருப்பு ஆகியன குறித்து ஆய்வு செய்தார். சந்தவாசல் உரக்கடைகளில் 25 டன் உரம் இருப்பு உள்ளதாகவும், இது விவசாயிகளுக்கு போதுமானது என விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, கடைகளின் வெளியே விலை பட்டியலை வைக்க வேண்டும், அதிக விலைக்கு உரம் விற்பனை செய்வது தெரிய வந்தால் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்தார். ஆய்வின் போது, வேளாண்மை துணை இயக்குனர் வேலாயுதம், உதவி இயக்குனர் குணசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : inspection ,manure stores ,suburbs ,
× RELATED குளிர்சாதன பேருந்தில் அமைச்சர் திடீர் ஆய்வு