×

செய்யாறு இந்தோ அமெரிக்கன் பள்ளி மாணவர்கள் கராத்தே, சிலம்பம் போட்டிகளில் சாதனை

செய்யாறு, நவ.13: செய்யாறு இந்தோ அமெரிக்கன் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் நடந்த கராத்தே, சிலம்பம் ஆகிய போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். திருவண்ணாமலை மாவட்ட அளவில் நடந்த கராத்தே போட்டிகளில் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் செய்யாறு இந்தோ அமெரிக்கன் பள்ளி மாணவிகள் பெ.ஷாலினி, பா.ஜனனி தங்கப் பதக்கம், பொ.தாராவதி வெண்கலப் பதக்கம் வென்றனர். 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பு.அனிஷா, ம.யோகேஷ்வரி, பி.சரண்யா தங்கப் பதக்கம், ம.ஜெய வெள்ளிப் பதக்கம் வென்றனர். 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வே.பார்கவி, தி.ஜெய, செ.கோதை, அ.சுவாதி, ஜெ.கீர்த்தனா, மோ.பிரியதர்ஷினி, வெ.சொர்ணலட்சுமி, இ.சவுமியா, கு.சுமித்ரா ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.

சிலம்பம் போட்டிகளில் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ம.சுதர்சன், செ.பவேஷ்ராம் ஆகியோர் தங்கம், ந.முகமதுஅமின், ரா.யுவன்சங்கர் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். 17 வயதுக்குட்பட்டோர் சிலம்பம் போட்டியில் வா.அரவிந்தன் தங்கம், கராத்தே போட்டியில் செ.யுவனேஷ், ரா.பிரவின்குமார், பா.சுலைமான், க.சியாம்சுந்தர் ஆகியோர் தங்கம், கு.சுமன், பா.சுனில் வெள்ளிப் பதக்கம் வென்றனர். 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் மு.சிவகார்த்திகேயன், வெ.துரைமுருகன், ம.சரவணன், ப.தர், மோ.பரத் ஆகியோர் தங்க பதக்கம் வென்றனர். இவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், பயிற்சி அளித்த கராத்தே மாஸ்டர் கராத்தே சந்திரசேகர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை பள்ளி தாளாளர் அ.ராதாகிருஷ்ணன், முதல்வர் அ.பா.சையத் அப்துல் இலியாஸ், துணை முதல்வர் க.கோவேந்தன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags : Indo American School Students Karate ,Silambam Competitions ,
× RELATED திருவண்ணாமலை மற்றும் ஆரணி...