×

பெரணமல்லூர் திருக்கரை ஈஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்

பெரணமல்லூர், நவ.13: பெரணமல்லூர் திருக்கரை ஈஸ்வரர் கோயிலில் நடந்த அன்னாபிஷேக விழாவில் முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.எஸ்.அன்பழகன் அன்னதானம் வழங்கினார். பெரணமல்லூரில் பிரசித்தி பெற்ற திருக்கரை ஈஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஐப்பசி மாதம் பவுர்ணமியன்று சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று காலை ஈஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து, மாலை 5 மணியளவில் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் கொண்டு அபிஷேகமும், அன்னத்தால் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். தொடர்ந்து, முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.எஸ்.அன்பழகன் தலைமையில் 500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Peranamallur Thirukkarai Eeswar Temple ,
× RELATED திருவண்ணாமலையில் உலக எய்ட்ஸ் தின...