×

ஆரணி நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர்

ஆரணி, நவ.13: ஆரணி நகராட்சி சார்பில்  பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி பழைய பஸ் நிலையத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு சுகாதார ஆய்வாளர் குமரவேல் தலைமை தாங்கினார். சித்த மருத்துவர் சங்கரீஸ்வரி, சுகாதார மேற்பார்வையாளர்கள் குமார், வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். டெங்கு களப்பணி உதவியாளர் சரவணகுமார் வரவேற்றார். இதில் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, புதிய பஸ் நிலையம், நகராட்சி வளாகம், அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நகராட்சி தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில்  மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. மேலும், நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளில் தினந்தோறும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, நிலவேம்பு குடிநீர் தேவைப்படும் பொதுமக்கள் 9944663780 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டால் நகராட்சி சார்பில், அவர்கள் வசிக்கும் இடத்திற்கு நிலவேம்பு குடிநீர் கொண்டு  சென்று வழங்கப்படும் என ஆணையாளர் தெரிவித்தார்.

Tags :
× RELATED திமுக ஒன்றிய செயலாளர், அதிமுக மாவட்ட...