×

கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் ஏகாம்பர ஈஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்

கண்ணமங்கலம், நவ.13: கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் ஏகாம்பர ஈஸ்வரர் கோயிலில் 265வது பவுர்ணமி பூஜை, 21ம் ஆண்டு அன்னாபிஷேகம் மற்றும் அம்மனுக்கு காதம்பரி அலங்காரம் நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 7 மணியளவில் பக்தர்களே மூலவருக்கு பாலாபிஷேகம் செய்தனர். பின்னர், மாலை 6 மணியளவில் மூலவருக்கு அன்னாபிஷேகம், அம்மனுக்கு காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர்.
அப்போது, சிவகான பேரிகை முழக்கமும், தேவார திருவாசக பாமாலையும் பக்தர்களால் ஓதப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அன்னாபிஷேகம் செய்த உணவு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, இரவு 8 மணியளவில் அருகில் உள்ள ஏரியில் அன்னம் கரைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் சிவ.கே.என்.சரவணன் தலைமையில் சிவனடியார்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags : Kolathur Ekambara Eswar Temple ,Kannamangalam ,
× RELATED கண்ணமங்கலம் அருகே ஆச்சரியம்...