துரிஞ்சாபுரம் அருகே விரல்களை பயன்படுத்தி வாய்ப்பாடுகளை எளிதாக ஒப்புவிக்கும் அரசு பள்ளி மாணவி

கலசபாக்கம், நவ.13:  துரிஞ்சாபுரம் அருகே விரல்களை பயன்படுத்தி கடினமான வாய்ப்பாடுகளை எளிதாக ஒப்புவிக்கும் அரசு பள்ளி மாணவியை வட்டார கல்வி அலுவலர் பாராட்டினார். திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 4ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, வகுப்பு ஆசிரியர் தமிழ்ச்செல்வி என்பவர், 10 விரல்களை பயன்படுத்தி வாய்ப்பாடுகளை எளிமையான முறையில் சொல்வது குறித்து கற்று கொடுத்தார். அதன்பேரில், மாணவி சாய்பிரியா என்பவர் 2வது வாய்ப்ப்பாடு முதல் 20வது வாய்ப்ப்பாடு வரை, தனது விரல்களை பயன்படுத்தி சரளமாக ஒப்புவிக்கும் திறமையை பெற்றுள்ளார். இதையடுத்து, கடினமான வாய்ப்பாடுகளை எளிமையான முறையில் ஒப்புவிக்கும் மாணவியின் திறமையை வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி ஆகியோர் பாராட்டினர்.

Related Stories:

>