×

காவேரிப்பாக்கம் அருகே அறுவடைக்கு தயாராகும் நெல் பயிர்கள்

காவேரிப்பாக்கம், நவ.13:  காவேரிப்பாக்கம் அருகே ரபி பருவத்தில் பயிரிட்ட நெல் கதிர்கள் அறுவடைக்கு தயாராகி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் போதிய மழை இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர்மட்டம் அடி பாதளத்துக்கு சென்றடைந்தது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு, பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட தொடங்கினர். அதேபோல் விவசாயமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த சில மாதங்களாக வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில்  அவ்வப்போது மழை பெய்ய தொடங்கியது.

இதனால், பூமி குளிர்ந்து, கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் சற்று மேலே உயர தொடங்கியது. இதனால், குடிநீர் பஞ்சம் நீங்க தொடங்கி விவசாயிகளும்  விவசாயம் செய்ய தொடங்கினர். இந்நிலையில், காவேரிப்பாக்கம் மற்றும்  சுற்றுப்புற பகுதிகளில், ரபி பருவத்தில் விவசாயிகள் நெல் பயிரிட்டனர். இதில் நெல் கதிர்கள் தற்போது வீறு கொண்டு எழுந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இதனால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Paddy ,Kaveripakkam ,
× RELATED காவேரிப்பாக்கம் கொள்முதல்...