×

நடமாடும் அருங்காட்சியக ரத வாகனம் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து அவதிக்குள்ளான மாணவிகள்

அணைக்கட்டு, நவ. 13: நடமாடும் அருங்காட்சியக ரத வாகனம் வெயிலில் நிறுத்தப்பட்டதால் நீண்ட வரிசையில் மாணவிகள் காத்திருந்து அவதிக்குள்ளாக்குள்ளாகினர். அணைக்கட்டு தாலுகா, ஊசூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் பார்ப்பதற்காக நடமாடும் அரசு அருங்காட்சியக வாகனம் வருவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, நடமாடும் அருங்காட்சியக ரத வாகனம் நேற்று ஊசூர் வந்தது. அரசு பள்ளி மெயின்ரோட்டை ஒட்டி இருந்ததால் வாகனம் நிறுத்த இடமின்றியும், மாணவிகள் வாகனத்தில் ஏறி பார்ப்பதற்கு போதிய இட வசதியில்லாததால் அந்த வாகனத்தை வேறு இடத்தில் நிறுத்துமாறு ஆசிரியர்கள் கூறினர். இதையடுத்து, அரசு தொடக்க பள்ளி அருகே குறுகலான சாலையில் ரத வாகனம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, மாணவிகள் அனைவரும் சென்று அருங்காட்சியக வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த அறிய படங்களை பார்த்தனர்.

அதில் ஆசிரியர்கள் வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த படங்களின் விபரங்கள் குறித்து மாணவிகளுக்கு விளக்கி கூறினர். இதையடுத்து, 1 மணியளவில் ரத வாகனத்தை மாணவிகள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் பஸ்சின் வெளியே வெயிலில் நீண்ட தூரம் காத்திருந்த மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். மேலும், குறுகலான சாலையில் வண்டி நிறுத்தப்பட்டு மாணவிகள் அதை சுற்றி நின்றதால், அப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு அவ்வழியாக வந்தவர்கள் வாகனம் நிறுத்தியவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். போதுமான ஏற்பாடுகளுடன் அரசு அருங்காட்சியக வாகனத்தை நிறுத்தாமல் வெயிலில் மாணவிகளை பார்க்க அனுமதித்த ஆசிரியர்கள் மற்றும் வாகனத்தை வெயிலில் விட்டு அதில் ஏறி  மாணவிகளை பார்க்க வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED முதல் வாக்காளர்கள், 5 நாளான...