×

பெத்த மகனே கொல்ல வர்றான்...போலீசில் கதறிய மூதாட்டி

கோவை, நவ.13: கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த 87 வயது மூதாட்டியின் கணவர் 10 ஆண்டிற்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். தனக்கு சொந்தமான வீட்டின் ஒரு பகுதியில் மூதாட்டி வசித்து வந்தார். வீட்டின் மற்றொரு பகுதியில் 3வது மகன் வசித்து வந்தார். சில மாதம் முன் மூதாட்டியை 3வது மகன் வீட்டைவிட்டு விரட்டி விட்டார். இதையடுத்து மூதாட்டி தனது வீட்டை மீட்டு தர சொல்லியும், மகனிடம் இருந்து பாதுகாப்பு கேட்டும் போத்தனூர் போலீசில் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த மூதாட்டி போலீசாரிடம், ‘‘எப்படியாச்சும் எம்பையங்கிட்ட பேசுங்க, எங் கழுத்தை புடுச்சு நெரிச்சு கொல்ல வர்றான். வூட்டுல இருந்து தொரத்திட்டான், நான் ரோட்டோரம் படுத்து தூங்கி பிச்சை எடுக்கிற நெலமைக்கு கொண்டாந்துட்டான், காப்பாத்துங்க சாமீ...,’ என கெஞ்சினார்.  இது தொடர்பாக விசாரித்த போலீசார், ‘‘நீ வூட்டுக்கு போ பாட்டி, எதாவது பிரச்னைன்னா, போத்தனூர் போலீஸ் வருவாங்க’’ என அனுப்பி வைத்தனர். எந்த முடிவும் கிடைக்காத நிலையில் மூதாட்டி ஸ்டேட் பாங்க் ரோட்டில் பிளாட்பாரத்தில் உட்கார்ந்து கதறினார். அவரிடம் ஒரு சிறு நோட்டும் சில செல்போன் எண்களும், ஒரு சேலை, ஒரு துண்டும் இருந்தது.

அவரிடம் விசாரித்தபோது, ‘‘என்னய கவனிச்சுக்க ஆளில்ல. மூத்த பையன் மாசத்திக்கு மூவாரம் ரூவா தருவான். என் கடைசி பையன் என் பேர்ல இருக்கிற சொத்தை புடுங்க பாக்கிறான்,  என் மூத்த பசங்க இத கேட்க வந்தாங்க, அவங்க மேல போலீசுல சொல்லி கேசு போட்டுட்டான்.  நா வூட்டுல இருந்து வந்து ரோட்டுலதான் தூங்கறேன், இதுக்கு மேல என்னால வேற எங்கயும் ேபாக முடியல. போலீஸ்காரங்க, பையங்கிட்ட பேசாம இருன்னு சொல்லி போக சொல்றாங்க, கலெக்டர் ஆபீசுக்கு போயியும் அழுது சொல்லி பாத்துட்டேன், யாரும் வந்து கேட்க மாட்டீங்கறாங்க. மனசாட்சிேய இல்லாம வெரட்டி வுடறாங்க. எனக்கு சாவு வந்தா கூட நிம்மதியாக செத்து போயிருவேன், இனி நா என்ன செய்றதுன்னு தெரியல, ’’ என்றார்.

Tags : Bethanna ,
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்