மாவட்ட அளவில் பேச்சுப்போட்டி

திருப்பூர், நவ. 13:  திருப்பூர், கே.எஸ்.சி. அரசு பள்ளியில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டி நேற்று நடந்தது.  திருப்பூர், கே.எஸ்.சி அரசு பள்ளியில் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கல்வி மாவட்ட போட்டியில் திருப்பூரில் 2 மாணவர்கள், பல்லடத்தில் 2, தாராபுரத்தில் 2, உடுமலையில் 2 என மொத்தம் 8 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், நேற்று மாவட்ட அளவிலான போட்டியில் 8 பேர் கலந்து கொண்டு, சமூக ஊடங்களால் நன்மையா?, தீமையா? என்ற தலைப்பில் பேசினர். இதில், நஞ்சியாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி கெளரி முதலிடமும், இரண்டாமிடம் பல்லடம் அரசு மகளிர் பள்ளி மாணவி ஜனனி, மூன்றாமிடம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி பிரியதர்ஷினி ஆகிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

அதேபோல், விண்வெளி ஆய்வில் இந்தியாவின் பங்களிப்பு மற்றும் கற்றலில் பல்முனை, ஊடங்களின் பங்கு எனும் தலைப்பில் கட்டுரை போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற 8 பேரில் மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சுவேதா முதலிடமும், புதுராமகிருஷ்ணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அமிர்ந்தவர்ஷினி இரண்டாமிடம், மூன்றாமிடம் கேத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் சதீஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இப்போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ் சான்றிதழ் வழங்கினார். இதில், தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் வரும் 19ம் தேதி கோவையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

Related Stories:

>