×

காங்கயத்தில் சாலை அகலப்படுத்தும் பணி

காங்கயம், நவ. 13:  காங்கயத்தில் சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலர் ஆய்வு மேற்கொண்டார்.   திருப்பூர் நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காங்கயம் நெடுஞ்சாலைத்துறையின் உள்கோட்டத்தில் சாலை அமைக்கும் பணி மற்றும் காங்கயம் காவல் நிலையம் அருகே ரவுண்டானா பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணி ஆகியன ரூ.8 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது. இப்பணியை தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை முதன்மை செயலர் பிரபாகர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறையின் திருப்பூர் வட்ட கண்காணிப்புப் பொறியாளர் பழனிவேல், சேலம் வட்ட கண்காணிப்பு பொறியாளர் சரவணன், திருப்பூர் கோட்டப் பொறியாளர் ஜெயலட்சுமி, கோவை கோட்டப் பொறியாளர் செல்வக்குமார், காங்கயம் உதவிக் கோட்டப் பொறியாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Road ,
× RELATED விருதுநகரில் பரிதாப நிலையில்...