×

நடு ரோட்டில் தோகை விரித்தாடிய மயில்

மஞ்சூர், நவ.13:  நடு ரோட்டில் தோகை விரித்தாடிய மயிலை சுற்றுலா பயணிகள் பரவசத்துடன் கண்டு ரசித்தனர்.    மஞ்சூரில் இருந்து கோவைக்கு செல்லும் சாலையின் இருபுறங்களிலும் அடர்ந்த காடுகள் சூழ்ந்துள்ளது. போக்குவரத்து அதிகம் இல்லாததால் யானைகள், மான்கள் உள்ளிட்ட விலங்குகள் பகல் நேரங்களிலேயே சர்வசாதரணமாக ரோடுகளில் உலா வருவதை காணலாம். குறிப்பாக இந்த சாலையில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கெத்தை முள்ளி இடையே மயில் ஒன்று தனது நீண்ட தோகையை விரித்தபடி நடு ரோட்டில் நடமாடியது. அப்போது அவ்வழியாக வாகனங்களில் வந்த சுற்றுலா பயணிகள் உட்பட பலர் தங்களது வாகனங்களை சாலையோரமாக நிறுத்தி தோகை விரித்தாடிய மயிலை பரவசத்துடன் கண்டு ரசிக்க தொடங்கினார்கள். பயணிகள் சுற்றி நிற்பதை பொருட்படுத்தாத மயில் தனது தோைகயை முன்னும், பின்னுமாக அசைத்து மேலும் பரவசப்படுத்தியது. இதனால் உற்சாகம் இடைந்த பயணிகள் பலரும் தங்களது செல்போன்களில் மயிலை படம் பிடித்ததுடன் அதற்கு முன்பாக நின்று செல்பி எடுத்து கொண்டனர். சுமார் 1மணி நேரத்திற்கும் மேலாக ரோட்டில் நடமாடிய மயில் பின்னர் அருகில் இருந்த காட்டிற்குள் சென்றது.

Tags : Peacock ,road ,
× RELATED கடமலை மயிலை ஒன்றியத்தில் சித்த...