×

ஒட்டன்சத்திரம், சீனாபுரம் மாட்டு சந்தைகளில் சுங்க கட்டண முறைகேடு

ஈரோடு, நவ.13: ஒட்டன்சத்திரம், சீனாபுரம் மாட்டு சந்தைகளில் சுங்க கட்டணம் வசூலிப்பதில் முறைகேடு நடந்து வருகிறது என விவசாய கூட்டமைப்பு குற்றச்சாட்டி உள்ளது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில், தமிழகத்தில் நடந்து வரும் மாட்டுச்சந்தைகளில் ஊழலும், முறைகேடும் நடக்கிறது. எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லை. சுங்க கட்டணம் பற்றிய அறிவிப்பு பலகையும் கிடையாது. ரசீதும் கொடுப்பதில்லை. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் நடந்து வரும் மாட்டுச்சந்தையில் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருபவர்களிடம் 120 ரூபாயும், விற்பனைக்கு பிறகு வாங்கி செல்பவர்களிடம் 120 ரூபாயும் சுங்கமாக வசூலிக்கின்றனர்.

இதேபோல், ஈரோடு மாவட்டம் பெருந்துறை சீனாபுரத்திலும் மாடுகளை கொண்டு வரும்போது 60 ரூபாயும், அதை வாங்கி செல்லும்போது 60 ரூபாயும் சுங்க கட்டணமாக வசூலிக்கின்றனர். இது சட்டத்திற்கு முரணானது. இதைத்தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்லியில் காற்று மாசு காரணமாக பள்ளிகள் அவ்வப்போது மூடப்படுவது நடைமுறையாகி போனது. தற்போது, சென்னைக்கும் இந்த ஆபத்து வந்து விட்டது. மற்ற நகரங்களுக்கும் பரவும் நிலை உள்ளது. இதற்கு அடிப்படை காரணம் உணவுமுறை, பயிர்முறை, வாழ்க்கை முறை மாற்றம், மக்கள் தொகை பெருக்கமே காரணம். இதற்கு தீர்வுகாண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், தென்னிந்திய நதிகள் இணைப்பு மக்கள் இயக்க தலைவர் முத்துசாமி, மக்கள் மன்ற அமைப்பாளர் செல்லப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : cottage ,Otton ,China ,
× RELATED திருவிக நகர் தொகுதியில் மக்கள்...