×

முட்டம் கடற்கரையில் மாணவ, மாணவியர் தூய்மை பணி

நாகர்கோவில், நவ.13: முட்டம் கடற்கரையில் மாணவ, மாணவியரின் தூய்மை பணி நடைபெற்றது. மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி குப்பைகள்
சேகரித்ததை அடுத்து கடற்கரைகளை தூய்மையாக வைத்திருக்க,  மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு சுற்றுச் சூழல் துறை சார்பில் நாடு முழுவதும் கடற்கரை பகுதிகளை தூய்மை படுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டது. இதன்படி  11 ம் முதல் 17ம் தேதி வரை கடற்கரையில் தூய்மை குறித்த விழிப்புணர்வு முகாம்கள்  சென்னை எலியட் கடற்கரை, காஞ்சிபுரம் மாவட்ட மாமல்லபுரம் கடற்கரை, விழுப்புரம் மாவட்டத்தில் கூனிமேடு கடற்கரை, கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டம் கடற்கரை பகுதிகளில் தூய்மை படுத்தும் பணி  தொடங்கியது.
 முட்டத்தில், பைரவி பவுண்டேசன்  அறக்கட்டளையுடன் இணைந்து இந்த தூய்மை பணி தொடங்கியது.

தூய்மைபணி முகாமை முட்டம் சகல புனிதர்கள் ஆலய வளாகத்தில் மாநில சுற்றுச் சூழல் அலுவலர் ராபின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு கையேட்டை வன உயிரின கௌரவ பாதுகாவலர் சோபனராஜ் வெளியிட்டார். சுற்றுச் சூழல் விழிப்புணர்வு உறுதிமொழியை தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் வாசித்தார். என்.எஸ்.எஸ் திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் அருள்ராஜ், இன்டாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லால்மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை பைரவி அறக்கட்டளை இயக்குநர் ஷோபா ஒருங்கிணைப்பு செய்துள்ளார். இம்முகாமில்  சாந்தபுரம்  டாக்டர் சாமுவேல் மேல்நிலைப்பள்ளி மற்றும்அம்மாண்டிவிளை உதயா கல்லூரி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Student ,beach ,Muttam ,
× RELATED தூத்துக்குடி கடற்கரையில் இருந்து...