×

கடனா அத்ரி கோயிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு

கடையம், நவ. 13: கடையம் அருகே உள்ள அத்ரி கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை கடனா நதி அணை மேல் பகுதியில் அனுசுயா பரமேஸ்வரி உடனுறை அத்ரி பரமேஸ்வர சுவாமி கோரக்கநாதர் கோயிலில் பவுர்ணமி, ஆடி அமாவாசை, பிரதோஷம், வைகாசி விசாகம், சித்ரா பவுர்ணமி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று பவுர்ணமியை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாரானை நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags : Kadana Atri Temple ,
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது