×

வேப்பலோடை அரசு பள்ளியில் மரக்கன்று நடும்விழா

குளத்தூர்,நவ.13: வேப்பலோடை அரசு பள்ளியில் மரக்கன்று நடுவிழா நடந்தது. குளத்தூர் அருகே உள்ள வேப்பலோடை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜெத்தா தமிழ் சங்கம், கலாம் இளந்தளிர் இயக்கம் மற்றும் அன்னை தெரசா கிராம பொதுநலச்சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும்விழா நடந்தது. தலைமை ஆசிரியர் சேகர், அன்னை தெரசா சங்க செயலாளர் ஜேம்ஸ் அமிர்தராஜ், கருப்பசாமி, முதுகலை ஆசிரியர் ராமகிருஷ்ணன், மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு மரம் நடுவதன் அவசியம், அதனால் ஏற்படும் பலன்கள் குறித்து ஆசிரியர்கள் பேசினர். தொடர்ந்து பள்ளி வளாகத்தை சுற்றி மரக்கன்றுகள் நட்டினர்.

Tags : Planting Ceremony ,Veppelodai Government School ,
× RELATED மணமேல்குடி தாலுகாவில் மரக்கன்று நடும் விழா