×

திருநின்றவூர் தெருக்களில் குப்பை குவியலால் சுகாதாரகேடு

திருநின்றவூர்: திருநின்றவூர் பேரூராட்சிக்குட்பட்ட  தெருக்களில் குவிந்து கிடக்கும் குப்பைகளால், சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் வீடுகளில் துப்புரவு தொழிலாளர்கள் வேலை செய்வதால்தான் குப்ப குவியல்களை  அகற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.    திருநின்றவூர் பேரூராட்சியில் கோமதிபுரம், பெரியகாலனி, ராமதாசபுரம், கன்னிகாபுரம், சுதேசி நகர், முத்தமிழ் நகர், திருவேங்கடநகர், லட்சுமிபுரம், கிருஷ்ணாபுரம், வச்சலாபுரம், முருகேசன் நகர், லலிதாஞ்சலி நகர், பிரகாஷ் நகர்  உள்ளிட்ட  ஏராளமான பகுதிகள் உள்ளன. இங்குள்ள 18 வார்டுகளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். சென்னை ஒட்டியுள்ள பேரூராட்சிகளில் திருநின்றவூர் பேரூராட்சியும் ஒன்றாகும். இப்பகுதியில் உள்ள குப்பைகளை பேரூராட்சி ஊழியர்கள் சரிவர அகற்றுவதில்லை.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், திருநின்றவூர் பேரூராட்சியில் சமீபகாலமாக முக்கிய பிரதான சாலை, தெருக்களில் குப்பைகளை சரி வர அகற்றுவதில்லை. எனவே பல தெருக்களில் உள்ள தொட்டிகளில் குப்பைகள் நிறைந்து  வழிகின்றன. குப்பைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கவர்கள், துணிமணிகள் காற்றில் பறந்து பைக், சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகளின் முகத்தில்  விழுவதால் விபத்தில் சிக்குகின்றனர். சில இடங்களில் கழிவுநீரில் குப்பைகள்  தேங்கிக்கிடக்கின்றன.

மேலும், தற்போது தொட்டிகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் நாளடைவில் மக்கி துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட மர்ம காய்ச்சல்களை உருவாக்கிறது. இதுகுறித்து பொது நலச்சங்க நிர்வாகிகள்  பேரூராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் கூறியும் பலனில்லை.சமீபத்தில், திருநின்றவூர் தனியார் பள்ளியில் பயின்ற மாணவி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பேரூராட்சி பகுதியில் குப்பைகளை அகற்ற போதுமான துப்புரவு ஊழியர்கள் இல்லை. பல இடங்களில் டயர்கள், தேங்காய் ஓடுகள், மட்டைகள், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கிக் கிடக்கின்றன.  சமீபகாலமாக பேரூராட்சி ஊழியர்களை  டிரைவர், எலக்ட்ரிஷியன் வேலைகளுக்கும் அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர். இதோடு மட்டுமல்லாமல் உயர் அதிகாரிகள் வீடுகளிலும் துப்புரவு ஊழியர்கள் வேலை செய்கின்றனர். இதனால் ஊழியர்கள் தட்டுப்பாட்டால் தெருக்களில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு உருவாகி நோய்கள்  பரவுகின்றன என்றனர்.


Tags : streets ,Thiruninvur ,
× RELATED அதிகார நந்தி வாகனத்தில் உலா வந்த...