×

நீட் தேர்வை திணித்தவர்கள்தான் மாணவர்கள் தற்கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி அறிக்கை

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை: நீட் தேர்வு காரணமாக தமிழ்நாட்டில் மட்டும் கடந்த சில ஆண்டுகளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இப்போது 14வது நிகழ்வாக மாணவர் தனுஷ் தற்கொலை நிகழ்ந்துள்ளது. நீட் தேர்வை வலுக்கட்டாயமாக திணித்தவர்கள்தான் இந்த 14 மாணவ, மாணவியரின் தற்கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும். மாணவர் தனுஷின் தற்கொலைதான் தமிழ்நாட்டில் நீட் தேர்வால் நிகழும் கடைசி தற்கொலையாக இருக்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரும் புதிய சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நாளை நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அந்த சட்டத்துக்கு எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர் தனுஷின் குடும்பத்துக்கு அனிதா தற்கொலை உள்ளிட்ட நிகழ்வுகளில் வழங்கப்பட்டதைப் போன்று ரூ.7 லட்சம் இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ற அரசு வேலையும் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்….

The post நீட் தேர்வை திணித்தவர்கள்தான் மாணவர்கள் தற்கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Annammani ,Chennai ,Bamaka Youth ,Annumarani ,Tamil Nadu ,Anamarani ,
× RELATED சென்னையில் நாளை நடைபெறும் வாக்கு...