×

சுகாதார ஆய்வாளரை தாக்கிய வாலிபர் கைது

துரைப்பாக்கம்:சென்னை மாநகராட்சி 15வது மண்டல சுகாதார துறை ஆய்வாளர் விக்னேஸ்வரன் நேற்று மதியம் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி சுடுகாட்டில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு சில வாலிபர்கள் இருந்துள்ளனர். இதை பார்த்த விக்னேஸ்வரன், ‘‘இங்கு யாரும் வரக்கூடாது. இங்கிருந்து அனைவரும் உடனே செல்லுங்கள்’’ என கூறினார். இதனால் அங்கிருந்த வாலிபர்களுக்கும், விக்னேஸ்வரனுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஒரு வாலிபர் திடீரென விக்னேஸ்வரனை தாக்கியுள்ளார். இதில் விக்னேஷ்வரன் மூக்கு உடைந்தது. இதுகுறித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் விக்னேஷ்வரன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த அஸ்வின் (26) என்பவரை கைது செய்தனர்.

Tags : health inspector ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது