×

போக்குவரத்து பணிமனை வளாகத்துக்குள் ஷெட் டிரைவர் மட்டும் பஸ் இயக்க வேண்டும்

சென்னை: போக்குவரத்து பணிமனை வளாகத்திற்குள் ஷெட் டிரைவர் மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கும்பகோணம் போக்குவரத்துக்கழகம், ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘சமீப காலங்களில் நமது போக்குவரத்துக்கழக பணிமனை வளாகத்தினுள், பேருந்து இயக்க அனுமதிக்கப்படாத தொழில்நுட்ப பணியாளர்கள் பேருந்துகளை இயக்கிய காரணத்தினால் சிறு விபத்துக்கள் மற்றும் நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளது தெரியவருகிறது. இனிவரும் காலங்களில் பணிமனை வளாகத்தினுள் ஷெட் டிரைவர் தவிர வேறு எந்த ஒரு பணியாளரும், பேருந்துகளை இயக்க அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுனர் தவிர இதர பணியாளர்கள் பேருந்து இயக்குவது கண்டறியப்பட்டால், சம்மந்தப்பட்ட கிளை மேலாளர் மற்றும் கிளை பொறியாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து கிளை மேலாளர்களும் தினசரி ஷெட் டிரைவர் நியமித்திட வேண்டும்’ எனக்கூறப்பட்டுள்ளது….

The post போக்குவரத்து பணிமனை வளாகத்துக்குள் ஷெட் டிரைவர் மட்டும் பஸ் இயக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Shed ,Workshop ,CHENNAI ,Kumbakonam ,Dinakaran ,
× RELATED பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலைநேரம் காலை 7 மணிக்கு மாற்றம்