×

நாசரேத்- சாத்தான்குளம் வழித்தடத்தில் டவுன்பஸ்

நாசரேத், நவ. 12: நாசரேத்தில் இருந்து சாத்தான்குளத்திற்கு டவுண் பஸ் இயக்க வேண்டும் என பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  நாசரேத்தில்  இருந்து தினமும் ஏராளமான பஸ்கள் சாத்தான்குளத்திற்கும், சாத்தான்குளத்தில்  இருந்து நாசரேத்திற்கும் சென்று வருகின்றன. இருப்பினும் காலை, மாலை மற்றும் குறிப்பிட்ட சில  நேரங்களில் பஸ்கள் இல்லாமல் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள்  மற்றும் பல்வேறு பணி நிமித்தம் செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து  நாசரேத் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ‘‘ இரவு நேரங்களில் குறிப்பிட்ட  நேரத்திற்கு பிறகு சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத்திற்கு பஸ் வசதி  இல்லை. நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி, வள்ளியூர் போன்ற ஊர்களுக்கு  சென்று இரவு நேரங்களில் திரும்பி வருபவர்களுக்கு சாத்தான்குளத்தில் இருந்து  நாசரேத்திற்கு செல்வதற்கு பஸ் இல்லாமல் மிகவும் அவதிப்படும் அவலம் நீடிக்கிறது’’  என்றார்.  எனவே, இனிமேலாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவிஷயத்தில் தனிக்கவனம் செலுத்ித நாசரேத்- சாத்தான்குளம் வழித்தடத்தில் தேவையான அளவுக்கு டவுன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ,  மாணவிகள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Townspace ,Nazareth- Satan Road ,
× RELATED ஜேசிபி டிரைவரை தாக்கிய 2 பேர் கைது