புத்தக கடை ஊழியரை கத்தியால் குத்தியவர் கைது

சேலம், நவ.12: சேலம் அருகே புத்தக கடை ஊழியரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். சேலம் சின்னதிருப்பதி காந்திநகரை சேர்ந்தவர் பாபு (50). புத்தக கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மருமகன் கேசவன். இவருக்கும் எதிர்வீட்டை சேர்ந்த ராஜா மகன் கார்த்தி (30) என்பவருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, பாபு தகராறை விலக்கி உள்ளார். அந்நேரத்தில் கார்த்தி கையில் வைத்திருந்த கத்தியால் பாபுவின் வயிற்றில் குத்தினார். இதில், படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கன்னங்குறிச்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, கார்த்தி, அவரது தாயார் கலா, தம்பி வினோத் ஆகிய 3 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இதில், கார்த்தியை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தொடர்ந்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>