×

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் முதல் உலகப்போர் நிறைவடைந்த 102ம் ஆண்டு தினம் அனுசரிப்பு

சேலம், நவ.12: முதலாம் உலகப்போர் நிறைவடைந்து 102ம் ஆண்டு தினம் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. முதலாம் உலகப்போர், கடந்த 1918ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதியன்று நிறைவடைந்தது. இந்த போரில், சேலத்தில் இருந்து 196 வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 18 பேர் போரிலேயே வீரமரணம் அடைந்த நிலையில், எஞ்சிய 178 பேர் மட்டுமே, சேலத்திற்கு திரும்பினர். ஆண்டுதோறும் நவம்பர் 11ம் தேதியை, முதலாம் உலகப்போரின் நிறைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, உலகப்போர் நிறைவடைந்து 102வது ஆண்டு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள, உலகப்போர் வீரர்களின் நினைவு கல்வெட்டிற்கு, கலெக்டர் ராமன் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார். தொடர்ந்து, வீரர்களின் குடும்பத்தினருக்கு பொன்னாட அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் மேஜர் பிரபாகர், வரலாற்று சங்க தலைவர் இம்மானுவேல், பொதுச் செயலாளர் பர்னபாஸ், பொருளாளர் ஞானதாஸ், அரசு கல்லூரி பேராசிரியர் தென்னரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Office ,First World War ,Salem Collector ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...