மாநகர், மாவட்ட புதிய நிர்வாகிகள் முதல்வருக்கு நன்றி

சேலம், நவ.12: சேலம் மாநகர் மாவட்ட அதிமுகவில் பல்வேறு பிரிவுகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் சேலம் வந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சேலம் மாநகர அதிமுகவுக்கு பல்வேறு பிரிவுகளுக்கு நிர்வாகிகளை நியமித்துள்ளனர். அதன்படி, சேலம் அம்மாப்பேட்டை பகுதி 2ல், 44வது வட்ட செயலாளராக பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல அம்மாப்பேட்டை பகுதி செயலாளராக ஜெகதீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். எம்ஜிஆர் இளைஞர் அணி பகுதி செயலாளர் ஜானகிராமன், அம்மாப்பேட்டை பகுதி எம்ஜிஆர் பகுதி செயலாளர் உமாபதி, அம்மாப்பேட்டை ஜெ.பேரவை பகுதி துணைத்தலைவர் திருநாகரன், எம்ஜிஆர் இளைஞர் அணி பகுதி இணை செயலாளர் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பகுதி செயலாளர் கலையரசன், எம்ஜிஆர் இளைஞர் அணி பகுதி பொருளாளர் செந்தில், எம்ஜிஆர் இளைஞர் அணி பகுதி இணை செயலாளர் வெங்கடேஸ்வரன், எம்ஜிஆர் இளைஞர் அணி பகுதி துணை செயலாளர் பெரியசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சூரமங்கலம் பகுதி செயலாளராக தியாகராஜன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். சூரமங்கலம் பகுதி 1 எம்ஜிஆர் இளைஞர் அணி பகுதி தலைவர் ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் சக்தி, பகுதி செயலாளர் மோகன், இணை செயலாளர்கள் மாதேஸ்வரன், அழகரசன், மனோ, துணை செயலாளர்கள் வேதபிரகாஷ், சண்முகம், பொருளாளர் தியாகராஜன்  ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தங்களை நிர்வாகிகளாக நியமித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>