×

சென்டர் மீடியன் கற்களுக்கு வர்ணம் பூசும் பணிகள் தீவிரம்

திருப்பூர்,நவ.12:திருப்பூர்-பல்லடம் மெயின் ரோட்டில் வாகன விபத்துகளை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுளள் சென்டர் மீடியன் தடுப்பு சுவர்களுக்கு கருப்பு, வெள்ளி வர்ணம் பூசும் பணிகளில் சாலை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூரிலிருந்து கோவை, உடுமலை, பொள்ளாச்சி, பழனி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் திருப்பூர்-பல்லடம் மெயின் ரோட்டின் வழியாக செல்கின்றனர். திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்கள் பள்ளிகள், கல்லூரிகள் அதிகளவு உள்ளதால் பல ஆயிரக்கணக்கான வாகனங்களில் பொது மக்ககள்  தினமும் வந்து செல்கின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் வாகன விபத்துகளை தவிர்க்க ரோட்டை அகலப்படுத்தி மையப்பகுதியில் சென்டர் மீடியன் தடுப்பு கற்களை திருப்பூரிலிருந்து பல்லடம் வரை 12 கி.மீ துாரத்திற்கு வைத்துள்ளனர். மையப்பகுதியில் உள்ள சென்டர் மீடியன் தடுப்பு கற்களுக்கு கருப்பு, வெள்ளை வர்ணம் பூசும் பணிகளில் சாலை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags :
× RELATED திருவில்லிபுத்தூரில் கலர் கோலப்பொடி தயாரிப்பு தீவிரம்