×

சாலையோரத்தில் கோழி கழிவு வீச்சு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கூடலூர், நவ. 12. கூடலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில்  நகராட்சி பணியாளர்கள் மக்கும் மக்காத குப்பைகளை நேரடியாக வீடுகளுக்கே வந்து பெற்றுச் செல்கின்றனர். பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.  ஆனால், கூடலூர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோழி இறைச்சி விற்பனை செய்பவர்கள் இறைச்சி கழிவுகளை மூட்டையாகக் கட்டி சாலையோரங்களில் வீசி விடுகின்றனர். குறிப்பாக ஊட்டி சாலையில் உள்ள ஹெல்த் கேம்ப் பகுதியை ஒட்டி சாலை ஓரத்தில் புதர்களுக்குள் கோழி கழிவுகள் வீசப்படுகின்றன.      இவற்றை உண்பதற்காக நாய்கள், சிறுத்தை, பன்றி உள்ளிட்ட விலங்குகள் வரத் துவங்கி உள்ளன. இப்பகுதியில் ஒரு அரசு பள்ளிக்கூடம், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், தலைமை தபால் நிலையம் ஆகியவை உள்ளன. கோக்கால் பகுதி மலைகளில் உற்பத்தியாகும் நீரோடைகளில் இந்த வழியாக சென்று பாண்டியாற்றில் கலக்கின்றன. கோழி கழிவுகள் வீசப்படுவதால் நீர் மாசும் ஏற்படுகிறது. மேலும் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் நடந்து செல்வோர் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் இப்பகுதியில் வீசும் துர்நாற்றத்தால் பாதிப்படைகின்றனர். சாலை ஓரங்களில் கோழிக் கழிவுகளை வீசும் வியாபாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Tags : road ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...