×

ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் அபாயகர மரங்கள் அகற்ற கோரிக்கை

ஊட்டி, நவ. 12: ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் வளர்ந்துள்ள ராட்சத கற்பூர மரங்களால் நோயாளிகள் மற்றும் ெபாதுமக்களுக்கு விபத்து அபாயம் நீடிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு அலுவலகம், பள்ளி வளாகம் மற்றும் பொது இடங்களில் ஏராளமான கற்பூர மரங்கள் உள்ளன. மழைக்காலங்களில் இந்த மரங்கள் விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால், உடமைகள் மட்டுமின்றி, சில சமயங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. இதனால், அந்த மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அரசோ மெத்தனம் காட்டி வருகிறது. ஏதேனும் விபத்துகள் நடந்தால் மட்டுமே அப்பகுதியில் உள்ள மரங்கள் அகற்றப்படுவதும், அதன் பின் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இந்நிைலயில், ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து நாள் தோறும் ஏராளமான நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான கற்பூர மரங்கள் இருந்தன இவைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியதன் பேரில் ஒரு சில மரங்கள் அகற்றப்பட்டன. ஆனால், இன்னும் சில மரங்கள் பொதுமக்களை மிரட்டி வருகிறது. மழை காலத்தில், காற்றுடன் மழை பெய்தால், இந்த மரங்கள் விழும் அபாயம் உள்ளது. இதனால், நோயாளிகளுக்கு மட்டுமின்றி, மருத்துவமனை செல்லும் சாலையோரங்களில் உள்ள குடியிருப்புகளுக்கும் விபத்து அபாயம் நீடிக்கிறது. எனவே, இந்த அபாயகரமான கற்பூர மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : Ooty Government Hospital Complex ,
× RELATED ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் 1...