×

7 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

கோவை, நவ. 12:  கோவை உக்கடம் - ஆத்துபாலம் இடையே மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.  இதனால் உக்கடத்தில் இருந்து செல்லக்கூடிய வாகனங்கள் நஞ்சுண்டாபுரம் வழியாகவும், உக்கடம் வரும் வாகனங்கள் புட்டுவிக்கி வழியாகவும், இருசக்கர வாகனங்கள், இலகுரக வாகனங்கள் பெரிய குளத்தின் மேல் பகுதி சாலை வழியாகவும் செல்ல மாற்றிவிடப்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள பகுதிகளுக்கு செல்வோர் 4 முதல் 6 கி.மீ தூரம் வரை சுற்றி செல்லக்கூடிய சூழ்நிலை உள்ளது. இதனிடையே சிலர் இருசக்கர வாகனத்தில் வருவோர் மாநகராட்சியின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள பில்லுக்காடு பகுதி சாலை வழியாக செல்கின்றனர்.  இதனால், இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

இந்நிலையில், கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட உக்கடம் மெயின் சாலை பில்லுக்காடு பகுதியில் போக்குவரத்து சீரமைப்பு பணிகளுக்காக ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த 7 வீடுகள் மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் முன்னிலையில் நேற்று ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன. இந்த வீடுகளில் வசித்தவர்களுக்கு ஏற்கனவே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பாக குடியிருப்புகள் வழங்க டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வீடுகளை காலி செய்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்  75வது வார்டு  சாரமேடு பகுதிக்கு சென்ற கமிஷனர் ஷரவன்குமார் ஜடாவத் அப்பகுதி மக்களிடம் சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது உடன் துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி இருந்தார்.

Tags : Houses ,
× RELATED 8070 ச.அடி கொண்ட அனைத்து வீடுகள் மின்...