அரசு பள்ளிக்கு சி.மு.சிவம் பெயர் சூட்ட வேண்டும்

காரைக்கால், நவ. 12:  காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான நாஜிம், முதல்வர் நாராயணசாமிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: காரைக்கால் மாவட்டத்தில் பிறந்து, தன்னை திராவிடர் கழகத்தில் இணைத்து கொண்டு, தந்தை பெரியாரின் சீரிய தொண்டராக பல்வேறு சமூக பணிகளை செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து மறைந்தவர் சி.மு.சிவம். இவரது நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில், காரைக்கால் நகர் புறத்தில் உள்ள சேனியர் குளத்து தெருவுக்கு சி.மு.சிவம் பெயரை சூட்ட வேண்டும். அல்லது அவர் வாழ்ந்த பகுதியில் இருக்கும் ஒப்பில்லாமணியர் கோயிwwwwwல் தெருவில் உள்ள வடமறைக்காடு (கிழக்கு) தொடக்கப் பள்ளிக்கு சி.மு.சிவம் அரசு தொடக்கப்பள்ளி என்று பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories:

>