×

சிவன் கோயிலில் அன்னாபிஷேகம்

திருவெண்ணெய்நல்லூர், நவ. 12:  திருவெண்ணெய்நல்லூர் சிவன் கோயிலில் அன்னாபிஷேக விழா நடந்தது.  திருவெண்ணெய்நல்லூரில் பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு வருடந்தோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி நாளன்று அன்னாபிஷேக விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டிற்கான விழா நேற்று நடந்தது. இதில் மூலவருக்கு அன்னம் மற்றும் காய், கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. விழாவில் திருவெண்ணெய்நல்லூர் மற்றும் அதை சுற்றியுள்ள மழையம்பட்டு, சின்னசெவலை, மழவராயனூர், சிறுமதுரை, சந்தபேட்டை, பெரியசெவலை உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


Tags : Shiva Temple ,
× RELATED தா.பேட்டை சிவன் கோயிலில் சிலை கடத்தல்...