×

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக கடலூரில் இருந்து செங்கல் அனுப்பி வைப்பு

கடலூர், நவ. 12: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக கடலூரில் இருந்து செங்கற்கள் ஜெய் ராம் புனித யாத்திரை குழு மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து ராமர் கோயில் கட்டும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக நாடு முழுவதும் கற்கள் அனுப்பும் பணிகள் தொடங்கி உள்ளன. அதன்படி கடலூர் இந்து தமிழர் கட்சி சார்பில் கடலூர் பகுதியில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட செங்கற்களை ஜெய் ராம் புனித யாத்திரைக்குழு தலைவர் ஆதிமதனகோபாலிடம் ஒப்படைத்தனர். இந்த குழுவினர் ராமேஸ்வரத்தில் ராமர்பாதம் அமைந்துள்ள பகுதியில் இருந்து மண் எடுத்து சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் அங்கிருந்து ரயிலில் அயோத்திக்கு புறப்பட்டுள்ளனர். இதையொட்டி துப்பாக்கி ஏந்திய போலீசார் ரயில் நிலையத்தில் குவிக்கப்பட்டிருந்தனர்.


Tags : Cuddalore ,Ayodhya ,Rama Temple ,
× RELATED ஆட்டோ மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழப்பு