×

மதுபாட்டில் விற்றவர் கைது

விருத்தாசலம், நவ. 12: விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் அப்பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கம்மாபுரம் கிழக்கு காலனி பகுதியை சேர்ந்த துரைசாமி மகன் நாகராஜ்(40) என்பவர் தனது வீட்டின் பின்புறம் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்ததால் கையும் களவுமாக பிடித்து கைது செய்ததுடன் அவரிடம் இருந்த 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானக் கடைகள் நாளை விடுமுறை