×

பணியின்போது டிரைவர் மரணம் தனியார் பள்ளி நிர்வாகம் இழப்பீடு வழங்ககோரிக்கை

திருச்சி, நவ.12: திருவெறும்பூரில் உள்ள தனியார் பள்ளி வேன் டிரைவர் பணியின்போது மரணமடைந்ததால் பள்ளி நிர்வாகத்திடமிருந்து இழப்பீடு பெற்றுத்தரக்கோரி டிரைவர் மனைவி நேற்று கலெக்டரிடம் மனு அளித்தார்.திருவெறும்பூர் நடராஜபுரம் நடுத்தெருவில் வசிப்பவர் மனோகரன் மனைவி லட்சுமி. இவரது கணவர் மனோகரன் திருவெறும்பூர் அடுத்த வேங்கூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பள்ளி வேன் ஓட்டுநகராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த ஜூலை மாதம் பள்ளி வேனை ஓட்டிச்சென்ற போது தீடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதில் உடனடியாக வண்டியை நிறுத்திவி–்ட்டார். இதனால் பள்ளி குழந்தைகளின் உயிர் காப்பாற்றப்பட்டது. ஆனால் அவரை மருத்துவனைக்குகொண்டு சென்று பரிசோதித்தபோது எனது கணவர் மனோகரன் இறந்து விட்டது தெரிந்தது. ஆனால் பள்ளி நிர்வாகம் சார்பில் எனது குடும்பத்திற்கு இதுவரை எந்த ஒரு இழப்பீடும் தரவில்லை. நான் ஏழ்மை நிலையில் வசித்து வருகிறேன். எனவே எனது குடும்ப வாழ்வாதாரத்திற்கு உதவிடும் வகையில் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் நிவாரணம் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மரணமடைந்த பள்ளி வேன் டிரைவரின் மனைவி லட்சுமி, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தார்.


Tags : death ,
× RELATED பைக் டயர் வெடித்து டிரைவர் பரிதாப பலி