×

மானிய விலையில் ஆயில் இன்ஜின் வழங்கும் திட்டம் துவக்கம்

திருத்துறைப்பூண்டி, நவ.12:
திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் நேரடி நெல் விதைப்பில் 35000 ஏக்கரும், சம்பா நடவில் 2000 ஏக்கரும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்து வந்த மழையினால் நெற்பயிர் வளர்ச்சி நன்றாக உள்ளது. கடந்த ஒரு வாரமாக மழை இல்லாததாலும் பகலில் அதிக வெப்பமும், இரவில் பனிப்பொழிவும் இருப்பதாலும் பயிரின் தோகைகள் வெளிர் நிறத்திலும், பாக்டீரியா இலைக்கருகல் நோயின் தாக்குதலும் துவங்கி உள்ளது. ஆற்றிலும் நீர் வரத்து குறைந்துள்ள நிலையில், சம்பா பயிர்களுக்கு நீர் பாய்ச்சி உரமிட வேண்டிய தருணத்தில் நெற்பயிர்கள் இருப்பதால் ஆயில் என்ஜின் மூலம் வாய்க்காலிருந்து நீர் இறைக்க வேண்டிய சுழ்நிலை உள்ளது.

வேளாண்மை துறையின் மூலம் தேசிய துணை நீர்பாசன மேலாண்மை முகமை என்ற திட்டத்தின்கீழ் ஆயில் என்ஜின் மற்றும் மின் மோட்டார் ரூ.15,000 மான்யத்தில் வழங்கப்படுகிறது. இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் திருவாரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சிவகுமார், ஆதிரெங்கம் கிராமத்தை சேர்ந்த நடராஜன் என்ற விவசாயிக்கு ஆயில் வழங்கி இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சாமிநாதன், வேளாண்மை அலுவலர் மணிமேகலை, உதவி வேளாண்மை அலுவலர்கள் சாமிநாதன், மகரஜோதி மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள் வேதநாயகி, சௌமியா ஆகியோர் உடனிருந்தனர்.


Tags : Launch ,
× RELATED தனியார் நிறுவன ராக்கெட் ஏவுவதற்கு இஸ்ரோ அனுமதி!!