×

வாலிபரிடம் தகராறு செய்து வீடு சூறை

பாபநாசம், நவ. 12: பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே துரும்பூரில் ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் வசிக்கும் தெருவில் பூபதி (60) என்பவர் இறந்தார்.இதையடுத்து இவரது உடலை அடக்கம் செய்வதற்காக மற்றொரு பிரிவினர் வசிக்கும் தெரு வழியாக தூக்கி சென்றனர். அப்போது அந்த தெருவை சேர்ந்த மணியரசன் (19) என்பவர் தனது தாய் கல்யாணியோடு பைக்கில் வீட்டுக்கு வந்தார். அப்போது இவருக்கும், ஊர்வலமாக வந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஒரு பிரிவினர் வசிக்கும் தெருவை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் சென்று மணியரசின் வீட்டு கேட்டின் மரக்கதவு, ஓடுகளை சேதப்படுத்தினர். இதை தடுத்த மணியரசனின் தந்தை ஜெயராமனுக்கு காயம் ஏற்பட்டது.இந்த தகவல் கிடைத்ததும் அந்த பகுதியில் பதற்றத்தை தவிர்க்கும் விதமாக போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் கபிஸ்தலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : plaintiff ,house ,
× RELATED வீட்டை உடைத்து கொள்ளை