ராஜராஜசோழன் சதய விழா ரத ஊர்வலம்

கும்பகோணம், நவ. 12: கும்பகோணத்தில் மாமன்னன் ராஜராஜ சோழன் சதயவிழா கூட்டமைப்பு சார்பில் ராஜராஜ சோழனின் 1034வது சதய விழா கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சியை முன்னிட்டு சாரங்கபாணி சன்னதியில் இருந்து ராஜராஜசோழன் அலங்கரிக்கப்பட்ட உருவபடம் அமைக்கப்பட்ட ரதம் புறப்பாடு துவங்கி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மகாமக குளம் அருகே உள்ள வீரசைவ பெரிய மடத்தில் முடிவடைந்தது. இதைதொடர்ந்து மாமன்னனுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. சதய விழா கூட்டமைப்பு தலைவர் சோழராஜன், செயலாளர் பாலா, அண்ணாமலை, கோதண்டராமன், செல்வராஜ், பொன்ராஜ், பெருமாள், ரங்கராஜன், பரமசிவம் பங்கேற்றனர்.

Related Stories:

>