×

புதுகை கீழராஜவீதி சாந்தநாதசுவாமி கோயில் அன்னாபிஷேக விழா

புதுக்கோட்டை, நவ.12: புதுக்கோட்டை கீழராஜவீதியில் வேதநாயகி அம்மன் உடனுரை சாந்தநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.இக்கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் மாலையில் சுவாமி மற்றும் அம்மனுக்கு காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Tags : Puthukkaiyarajavidhi Shantanathaswamy Temple Annabhishekam Ceremony ,
× RELATED சாலையின் குறுக்கே மரம் விழுந்தது...