×

306 கிலோ நெகிழி பொருட்களை சேகரித்து கிராம ஊராட்சியிடம் அளித்த அரசு பள்ளி மாணவர்கள்

அரியலூர், நவ. 12: நெகிழி ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கல்லக்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 306 கிலோ நெகிழி பொருட்களை சேகரித்து ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளியில் நடந்த நெகிழி விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை திருமலைச்செல்வி தலைமை வகித்து நெகிழி பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ, மாணவிகளிடம் எடுத்துரைத்தார்.இதைதொடர்ந்து தெருவில் கிடந்த 306 கிலோ நெகிழி பொருட்களை சேகரித்து கல்லக்குடி ஊராட்சி நிர்வாகத்திடம் நெகிழி மாணவ, மாணவிகள் ஒப்படைத்தனர். அதிகபட்சமாக 7ம் வகுப்பு மாணவர்கள் 164 கிலோ நெகிழி பொருள்களை சேகரித்தனர்.
இதில் 49 கிலோ நெகிழி பொருள்களை சேகரித்த மாணவர் கோகுல்நாத்துக்கு முதல் பரிசும், மற்றவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது. இவர்களுடன் ஆசிரியர்கள் சாந்தி, தீபக், பாரதி, ஆனந்த், கவிதா ஆகியோரும் நெகிழி பொருட்களை சேகரித்தனர்.


Tags : Government school students ,village ,panchayat ,
× RELATED பாணாவரம் அருகே விழிப்புணர்வு உடல்,...