×

அரியலூர் மின்நகர் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் ஆய்வு

அரியலூர், நவ. 12: அரியலூர் மின்நகர் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணியை கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார்.அரியலூர் மாவட்டத்தில் ஊராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை, தூய்மை பணிகள் நடந்து வருவதை கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். அரியலூர் மின்நகர் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் தூய்மையான குடிநீர் வழங்கப்படுவதையும், வீடு வீடாகவும், திறந்த வெளிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் கலெக்டர் ரத்னா கூறியதாவது: அரியலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. மேலும் பொதுமக்கள் மழை காலங்களில் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும். சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காமலும், நீர்நிலைகளில் குழந்தைகளை குளிக்க அனுப்பாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம மற்றும் நகர்ப்புற பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஒவ்வொரு கிராமத்திலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் தங்களை ஈடுபத்தி கொள்ள விருப்பமுள்ள தன்னார்வ இளைஞர்கள், இளைஞர் அமைப்புகள், இளைஞர் நற்பணி மன்றங்கள், நேரு யுவகேந்திரா போன்ற அமைப்புகள் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலாளருடன் தொடர்பு கொண்டு சேவை செய்ய வேண்டும் என்றார்.ஆய்வின்போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஹேமசந்த்காந்தி, உதவி இயக்குனர் பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் கலையரசன் மற்றும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், ஊராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags : Ariyalur ,
× RELATED விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு 10 ஆண்டு சிறை