×

கரூர் மாவட்டத்தில் மழை அளவு குறைந்ததால் பனிப்பொழிவு அதிகரிப்பு

கரூர், நவ. 12: கரூர் மாவட்டத்தில் மழையின் தாக்கம் குறைந்ததால் பனிப் பொழிவு அதிகரித்துள்ளது.பொதுவாக வடகிழக்கு பருவமழை முடியும் சமயத்தில்தான் பனிப் பொழிவு துவங்கும். டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு அதிகளவு இருக்கும். ஆனால் கடந்த ஒரு வாரமாக குறிப்பிடத்தக்க மழை கரூர் மாவட்டத்தில் பெய்யாத நிலையில் பனிப்பொழிய ஆரம்பித்துள்ளது. அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை கரூர் நகரின் பல பகுதிகளில் அதிகளவு பனிப்பொழிவு இருந்து வருகிறது.பனிப்பொழிவின் காரணமாக, வாகன போக்குவரத்தும் அதிகாலை நேரங்களில் பாதிக்கப்பட்டு வருகிறது. திரும்பவும் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு, மழை பெய்யும் பட்சத்தில் பனி பெய்வது குறையும் என கூறப்படுகிறது. எனவே டிசம்பர் வரை மழையை விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினர்களும் எதிர்நோக்கியுள்ளனர்.


Tags : Karur ,district ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்