×

லாரி கவிழ்ந்து விபத்து: டிரைவர் உயிர் தப்பினார்

குளித்தலை, நவ. 12: குளித்தலை அருகே உரம் லோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்.காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது உரத்தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. எனவே வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து இங்கு உரம் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து நேற்றுமுன்தினம் காலை உர மூட்டைகள் ஏற்றிய லாரி அரியலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.

லாரியை கரூர் மாவட்டம் வீரணாம்பட்டியை சேர்ந்த மணி(40) என்பவர் ஓட்டிவந்தார். இரவு 9 மணிக்கு லாரி குளித்தலை அருகே உள்ள மைலாடி என்ற இடத்தில் வந்தது. அப்போது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக டிரைவர் மணி லாலியை ஓரமாக ஒதுக்கினார்.எதிர்பாராதவிதமாக லாரி கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் உள்ள சிறிய வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் மணி காயமின்றி தப்பினார். இது குறித்து குளித்தலை போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags :
× RELATED சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோவில் கைது