×

குப்பை தொட்டி வைக்காததால் பிஎஸ்கே தெருவில் மலைபோல் குவிந்துள்ள குப்பை கழிவுகள்

காஞ்சிபுரம், நவ.12: காஞ்சிபுரம் நகராட்சி பிஎஸ்கே தெருவில் நகராட்சி சார்பில் குப்பை தொட்டி வைக்காததால் சாலையோரத்தில், வீடுகளில் இருந்து வெளியேறும் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் நகராட்சி பிஎஸ்கே தெருவில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தனியார் பள்ளி உள்ளது. இங்கு நகராட்சி சார்பில் குப்பைத்தொட்டி வைக்ககவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைக் கழிவுகளை எங்கு கொட்டுவது என தெரியாமல், வீட்டின் அருகே சாலையோரத்திலேயே கொட்டுகின்றனர். இதையொட்டி அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் மழைநேரங்களில் குப்பைகள் மழைநீரோடு சேர்ந்து சாலை சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது.

இதுகுறித்து பலமுறை அப்பகுதி பொதுமக்கள், நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் கூறுகின்றனர்.  எனவே, பிஎஸ்கே தெரு வில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாவற்கு முன், பொதுமக்கள் வீட்டு குப்பைக் கழிவுகளை கொட்ட குப்பைதொட்டி வைக்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Tags : BSK Street ,
× RELATED குப்பை கொட்டுவதை தடுக்கக்கோரி ராணிமகாராஜபுரம் மக்கள் சாலை மறியல்