×

உரிய இழப்பீடு வழங்காமல் தொடங்கிய திருப்போரூர் - தண்டலம் புறவழிச்சாலை பணியை நிறுத்த வேண்டும்

காஞ்சிபுரம், நவ. 12: திருப்போரூர் - தண்டலம் செல்லும் வழியில் செயல்படுத்தப்படும் ராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்ப சாலை பணிக்கு கையகப்படுத்தும் நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்காமல் பணி தொடர்வதை நிறுத்த வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கலெக்டர் பொன்னையாவிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. திருப்போரூர், தண்டலம் கிராமங்களைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளான எங்களின் வாழ்வாதார நிலங்களை ஓஎம்ஆர் புறவழிச்சாலைக்கான நிலம் கையகப்படுத்துதல் குறித்து பல ஆண்டுகளுக்கு முன் கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை இழப்பீடு வழங்குவது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் திருப்போரூரில் உண்ணாவிரதம் நடத்தி, எங்களது எதிர்ப்பை தெரிவித்தோம்.

தொடர்ந்து மாநில தலைமை செயலாளருக்கு புகார் மனு அளித்தோம். தலைமைச் செயலாளரின் ஆலோசனையின்பேரில் சாலை விரிவாக்க நிலம் கையகப்படுத்தும் நிர்வாக ஆணையருக்கு முறைப்படி புகார் மனு அளித்தோம்.இந்நிலையில் எங்களின் வாழ்வாதார நிலங்களில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, இழப்பீடு பெறும் உரிமையை நிராகரித்து சாலை விரிவாக்க பணி தொடங்கி உள்ளது.  இச்செயல் ஏழை விவசாயிகளான எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலையும், தற்கொலை மனநிலையை உருவாக்கும் படியுள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் கருணை அடிப்படையில் துரித நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வியல் உரிமையை காக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Tiruppore-Dandalam Expressway ,
× RELATED காஞ்சி சங்கரா பல்கலைக்கழகத்தில் வேதபாடசாலை மாணவர்கள் ஆய்வு