×

வெங்கலில் கரையான் புற்றான பயணிகள் நிழற்குடை

ஊத்துக்கோட்டை, நவ.12 : வெங்கல் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி அருகே கரையான் புற்றுடன் காணப்படும்  பஸ் நிறுத்த பயணிகள் நிழற்குடையில் பாம்பு இருக்குமோ என்று பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் - பெரியபாளையம் சாலையில்   வெங்கல் அருகே தனியாருக்குச் சொந்தமான பள்ளி மற்றும் கல்லூரி, தனியார் கம்பெனி  உள்ளது.  இந்த  பள்ளி, கல்லூரிகளுக்கு பெரியபாளையம், வடமதுரை, வெங்கல், தாமரைப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவ, மாணவிகள் வருகின்றனர். வகுப்பு முடிந்ததும் தங்கள் வீடுகளுக்கு திரும்புவதற்கு இங்குள்ள பஸ் நிறுத்தத்துக்கு வருகின்றனர்். அங்கிருந்து பஸ் மூலம் வீடுகளுக்குச் செல்லுவார்கள்.

மேலும் இந்த பகுதியில் கடை, வீடு உள்ளவர்களும் பொருட்கள் வாங்க  வெங்கல், தாமரைப்பாக்கம், ஆவடி, திருவள்ளூர் பகுதிகளுக்கு சென்றுவர இந்த பஸ் நிறுத்தம் வருகின்றனர்.இங்குள்ள நிழற்குடையில் கரையான்  புற்று உள்ளது. இதனால் இந்த பஸ் நிறுத்தத்திற்கு வருபவர்கள் கரையான் புற்றில் பாம்பு இருக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிறுத்தத்தில் உள்ள புற்றை  அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Travelers ,Photo Gallery ,
× RELATED வேளாண் உதவி இயக்குனர் தகவல் பயணிகள் யாருமின்றி