உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

திருவள்ளூர், நவ. 12 : உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, திருவள்ளுர் அடுத்த ஈக்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவுக்கு பிறகு, மாவட்ட தேர்தல் அலுவலர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறுகையில், ‘’திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு, ஆவடி மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த உள்ளது. இவற்றிற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருவள்ளுர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பூந்தமல்லி நகராட்சியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் 31.10.2019 முதல் பெல் நிறுவன பொறியாளர்களால் முதல் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, குழுக்கள் முறையில் பிரித்தளிக்கப்படும்.

மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் மொத்தம் 2577 வாக்குச் சாவடிகள், நகர்ப்புற பகுதிகளில் 682 வாக்குச் சாவடிகள் உள்ளது. மொத்த வாக்காளர்களில் ஊரகப் பகுதிகளில் 13,54,000 வாக்காளர்களும், நகர்ப்புறப் பகுதிகளில் 6,84,000 வாக்காளர்களும் உள்ளனர்.மொத்த வாக்கு அளிக்கும் இயந்திரங்களின் எண்ணிக்கை 6,403 ஆகும். நடந்து முடிந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களை வைத்து பதற்றமான, மித பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் கண்டறியப்பட உள்ளது’ என்றார்.

இதில், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கோ.கனகராஜ், நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) எஸ்.லதா உட்பட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>