×

விமான நிலையத்தில் பேட்டரி வாகனங்கள் நிறுத்தம்: பயணிகள் அவதி

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பேட்டரி வாகனங்கள் 2013ல் புதிய உள்நாட்டு மற்றும் சர்வதேச முனையங்கள் பயன்பாட்டிற்கு வந்தன. இந்த இரண்டு முனையங்களுக்கும் இடையே சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்த நிலையில் உள்நாட்டு விமானங்களில் வரும் பயணிகளில் பலர் சர்வதேச முனையத்திற்கு சென்று அங்கிருந்து வெளிநாட்டுக்கு செல்லும் விமானங்களில் செல்வார்கள் அதைபோல் வெளிநாடுகளில் இருந்து வரும் பலர் உள் நாட்டு விமான நிலையம் வந்து மற்றொரு உள்நாட்டு விமான நிலையம் மூலம் தங்களுக்கு சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் அவர்களை டிரான்ஸ்சிட் பயணிகள் என்று அழைப்பார்கள். அந்த பயணிகளின் சிரமத்தை போக்கும் விதத்தில் இந்திய விமான நிலைய ஆணையம் இரண்டு முனையங்களுக்கு இடையே பேட்டரி வாகனங்களை இயக்கத்தொடங்கியது.

அந்த வாகனங்களை தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று அந்த பேட்டரி கார்களை 24 மணி நேரமும் இயக்கின. மூட்டை முடிச்சுகளுடன் வரும் டிரான்ஸிட் பயணிகள் இந்த வாகனங்களில் ஏற்றிச்சென்றனர். அதற்காக பயணிகளிடம் எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை.  இந்த வாகனங்களில் தனியார், கார்ப்பரேட் நிறுவன விளம்பரங்கள் பொறிக்கப்படுவதால் அந்த நிறுவனங்கள் அளிக்கும் ஸ்பான்ஸர் தொகை மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் வழங்கும் தொகையில் இந்த சேவை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்தது. ஆனால் இம்மாதம் 1ம் தேதியிலிருந்து இந்த பேட்டரி வாகனங்கள் தரைதளத்தில் வருகைப்பகுதியில் முழுவதுமாக நிறுத்தப்பட்டுவிட்டன. இரண்டாம் தளத்தில் புறப்பாடு பகுதியில் ஒன்றிரண்டு பேட்டரி கார்கள் ஓடின. இந்திய விமான நிலைய ஆணையத்தின் பெயரில் பேட்டரி வாகனங்கள் ஓடின. அதுவும் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே ஓடின. இதனால் கடந்த 1ம் தேதியிலிருந்து உள்நாட்டு முனையத்துக்கும் சர்வதேச விமான நிலைய டிரான்ஸிட் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து, சென்னை விமான நிலைய இயக்குனர் குமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது சென்னை விமான நிலையத்தில் பேட்டரி வாகனத்தை இயக்கிய தனியார் ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது. அவர்களுக்கு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை எனவே தனியார் பேட்டரி வாகனங்கள் சென்னை விமான நிலையத்தில் இயக்குவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பேட்டரி வாகனங்களை விமான நிலைய ஆணையமே தொடர்ந்து இயக்குவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. எனவே இந்த பேட்டரி வாகனங்களை இயக்கும் பொறுப்பை சென்னை  மெட்ரோ ரயில்வே நிறுவனத்திடம் ஒப்படைப்பது பற்றி நாங்கள் ஆலோசித்துவருகிறோம்  என்றார்.

Tags : airport ,
× RELATED சென்னை விமான நிலையம் திறப்பு 2 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டது