×

மடிப்பாக்கம் கோவிந்தசாமி நகரில் திறந்து கிடக்கும் குடிநீர் தொட்டிகள்: பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம்

ஆலந்தூர்: பெருங்குடி மண்டலத்தில் உள்ள பெரும்பாலான குடிநீர் தொட்டிகள் திறந்தே கிடப்பதால், கொசு உற்பத்தி மையமாக மாறியுள்ளது. பெருங்குடி மண்டலம்  188வது வார்டுக்குட்பட்ட மடிப்பாக்கம் கோவிந்தசாமி நகர் முதல் குறுக்கு தெருவில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தொட்டி மூடி இல்லாமல் திறந்து கிடக்கிறது. இதேபோல், மடிப்பாக்கத்தில் உள்ள பெரும்பாலான குடிநீர் தொட்டிகள் திறந்த நிலையில்தான் இருக்கின்றன. இதனால், காற்றில் தூசி பறந்து குடிநீர் மாசடைவதுடன், காகங்கள் இந்த தொட்டியில் தண்ணீர் குடிக்கும் போது, அவை கொண்டு வரும் இறந்த எலி,

இறைச்சி கழிவுகள் உள்ளிட்டவை குடிநீர் தொட்டிகளில் விழும் நிலை உள்ளது. இதனால், குடிநீர் துர்நாற்றம் வீசுவதுடன், இதை பயன்படுத்தும் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், இதுபோன்ற  நிலையில் உள்ள குடிநீர் தொட்டிகளில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகக்கூடிய சூழ்நிலையும் உள்ளது. வீடுகளில்  உள்ள தண்ணீர் தொட்டிகள், டயர்கள், கொட்டங்குச்சி, பிளாஸ்டிக் பொருட்கள்  உடைந்த குடம், ஆட்டுக்கல் போன்றவற்றில்   உள்ள தண்ணீரில் தங்கி இருந்தால், கொசு உற்பத்திக்கு வழிவகுப்பதாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மாநகாராட்சி குடிநீர் வாரிய அதிகாரிகள், நல்ல தண்ணீரில்தான் டெங்கு கொசுக்கள் உறபத்தியாகும் எனவும், தண்ணீரை திறந்து வைக்க கூடாது எனவும்  விழுப்புணர்வு பிரச்சாரம்  செய்கின்றனர். ஆனால், இதுபோன்ற மூடப்படாத குடிநீர் தொட்டிகளை மூட வேண்டும் என களப்பணிகளில் ஈடுபட்டுபடுபவர்களிடம் ஏன் சொல்வதில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இதுகுறித்து பெருங்குடி மண்டல குடிநீர் வாரிய அதிகாரியிடம் புகார் கொடுத்தும் எந்தவித  நடவடிக்கையையும் எடுக்கப்படாமல் உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘எங்களுக்கு தெரிந்து இந்த தண்ணீர் தொட்டி மற்ற  பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளும்? திறந்துதான் காணப்படுகிறது.

வீடுவீடாக டெங்கு தோய்கள் பரப்பும் கொசுக்கள் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதிக்கும் குடிநீர் வாரிய அதிகாரிகள் கண்களுக்கு இதுபோன்ற குடிநீர் தொட்டிகள் திறந்து கிடப்பது இவர்களது கண்களுக்கு தெரியாமல் போனது விந்தையாக உள்ளது.   தற்போது, டெங்கு காய்ச்சல் நோய் எங்களை தற்போது எங்களை அச்சுறுத்துகிறது பெருங்குடி மண்டலத்தில்மட்டும் 8 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். இந்த டெங்கு நோய்  எங்கள் பகுதியில் பரவுவதற்குள் இதுபோன்ற திறந்தவெளி தொட்டியிலே கணக்கெடுத்து மேல் மூடி போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : drinking water tanks ,Madipakkam Govindaswamy ,
× RELATED வத்திராயிருப்பில் காட்சிப் பொருளான...