×

வியாசர்பாடி, கிண்டி கோட்டங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: நாளை மறுநாள் நடக்கிறது

சென்னை: வியாசர்பாடி மற்றும் கிண்டி கோட்டத்தில் நாளை மறுநாள் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறும், என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:வியாசர்பாடி கோட்டத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், வரும் 12ம் தேதி காலை 11 மணியளவில் 110/33 கி.வோ வியாசர்பாடி துணை மின் நிலைய வளாகத்தில் (ராமலிங்கர் கோயில் எதிரில்) அமைந்துள்ள செயற்பொறியாளர் /  இயக்கம் மற்றும் பராமரித்தல் / வியாசர்பாடி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில், வியாசர்பாடி கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் பங்கேற்று புகார் மற்றும் கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு காணலாம்.

இதேபோல், கிண்டி கோட்டத்திற்கான மின் நுகர்வோர்  குறைதீர் கூட்டம், வரும் 12ம் தேதி காலை 11 மணியளவில், 2வது தளம், 110  கி.வோ. கே.கே நகர் துணை மின்நிலைய வளாகம், கே.கே.நகர், சென்னை-78 என்ற முகவரியில்   அமைந்துள்ள செயற்பொறியாளர் / கிண்டி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கிண்டி  கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் இந்த குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று பயனடையலாம்.




Tags : Vyasarpadi ,Electricity Consumer Grievance Meeting ,Kindi Kota ,
× RELATED செயின் பறிக்க முயன்ற ரவுடி கைது