×

செங்கம் அருகே மனுநீதிநாள் முகாமில் 118 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

செங்கம், நவ.8: செங்கம்  அடுத்த வடமாத்தூர் கிராமத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமில் 118 பயனாளிகளுக்கு ஆர்டிஓ தேவி  நலத்திட்ட உதவிகள் வழங்கினார். செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் வடமாத்தூர், குலால்பாடி, பெரியகுளம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கி, வடமாத்தூர் கூட்டுறவு வங்கி வளாகத்தில் நேற்று சிறப்பு மனுநீதிநாள் முகாம் நடந்தது. முகாமிற்கு தாசில்தார் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். துயர் துடைப்பு தாசில்தார் சுகுணா,   வட்ட வழங்கல் அலுவலர் சுமதி, கிராம நிர்வாக அலுவலர் சுபாஷ் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் தமிழரசி வரவேற்றார். ஆர்டிஓ தேவி 118 பயனாளிக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முடிவில்  கிராம நிர்வாக அலுவலர் குணாநிதி நன்றி கூறினார்.

அதிகாரிகள் ஆப்சென்ட்
வழக்கமாக ஆர்டிஓ கலந்து கொள்ளும் முகாம்களில் முதல் நிலை அலுவலர்கள் பங்கேற்று மக்களின் கோரிக்கை மற்றும் புகார்களுக்கு பதில் அளிப்பது, தீர்வு காண்பது வழக்கம். ஆனால், நேற்று நடந்த முகாமில் உயர்நிலை அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

எம்எல்ஏவால் தள்ளிப்போன முகாம்
கலசபாக்கம்  எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் தன்னுடைய தொகுதி என்பதால், நான் வராமல் முகாம் நடத்தக்கூடாது என அரசு அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனுநீதிநாள் முகாம் கடந்த மாதம்  9ம் நடைபெற இருந்த நிலையில் 5 முறை  தள்ளி வைக்கப்பட்டது. ஆனால், நேற்று வேறு வழியின்றி முகாம் நடத்தப்பட்டது.

Tags : Chengam ,nephew camp ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 47 ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட ஆணை