காலாவதியான அஞ்சல் பாலிசிகளை புதுப்பிக்க அவகாசம்

தர்மபுரி, நவ.8: காலாவதியான அஞ்சல் பாலிசிகளை புதுப்பிக்க, வரும் டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீஹரி வெளியிட்டுள்ள அறிக்கை: தபால்துறையின் வாடிக்கையாளர்கள் தங்களது அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகள் தொடர்ந்து, 5 வருடம் பிரீமியம் கட்ட தவறிய மற்றும் காலாவதியான மற்றும் முதிர்வு அடையாத பாலிசிகள் இருந்தால், அதை புதுப்பிக்க சிறப்பு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள், தங்களது உடல் தகுதி சான்றை, அங்கீகரிக்கப்பட்ட அரசு மருத்துவரிடம் பெற்று, இதுவரை செலுத்தாமல் இருந்த நிலுவை பிரீமியம் தொகையை வட்டியுடன் செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த சலுகையை பெற அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகலாம். இந்த சிறப்பு சலுகை காலம் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை மட்டுமே. வரும் 2020ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு பிறகு இந்த வசதி கிடையாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags :
× RELATED காலாவதியான அஞ்சல் பாலிசிகளை புதுப்பிக்க டிசம்பர் 31 வரை அவகாசம்